புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


நடிகை குஷ்பு மீதான வழக்கு : ஜனவரிக்கு ஒத்திவைப்பு
தமிழ் பெண்கள் கற்பு குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களை இழிவு படுத்தியதாக கூறி, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முருகன், 2005ம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் குற்றவியல் நடுவர்
நீதிமன்றம், 2ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், 2005 நவ.,16ல் மேட்டூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான குஷ்பு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய குஷ்பு கார் மீது, அழுகிய முட்டை, தக்காளி வீசியதாக, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்பட, 41 பேர் மீது மேட்டூர் தாசில்தார் ஃபைஸ் முகம்மதுகான் மேட்டூர் போலீஸில் புகார் செய்தார்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்1ல் நடக்கிறது. நேற்று குஷ்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் ஜனவரி, 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ad

ad