புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி நாங்களும் அக்கறையோடு கவனிக்கிறோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணிவிழா மலர் வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மணி விழா மலரை வெளியிட்ட,
முதல் பிரதியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:
டெசோ சார்பில்  நீங்கள் 5ஆம் தேதியன்று இலங்கை தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4ஆம் தேதியன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக்கிறார்களே?
நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால் தான்!
மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சனையில் தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?
அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
7 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?
அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சனைக்கு ஆதரவாகவும், டெல்லியில் பேசும் போது எதிராகவும் பேசுகிறார்களே?
யார் அப்படி பேசுகிறார்கள்?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் பேசியிருக்கிறாரே?
இதற்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேச வில்லை என்றார்.
அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற்குப்பதிலாக, இந்தியாவே தீர்மானத்தை முன் மொழியுமா?
இந்தியாவே தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத்  தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொலிப்பதாக அமையும். இந்தத் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக்கறையோடு கவனிக்கிறார்கள்; நாங்களும் தான்!
மதுவிலக்குப் பிரச்சனைக்காக காந்தியவாதி சசிபெருமாள் 33 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?
சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்கனவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங்களை விட்டு விட முடியாது. அளவுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
எப்படி இருக்க வேண்டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
ஒவ்வொரு முறையும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப் பிரச்சனையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?
அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.
இலங்கையில் ராஜபக்சேவை சுப்பிரமணிய சுவாமி சந்தித்ததைப் பற்றி?
நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே?
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
ஜெனீவாவில் இருந்து நாடு திரும்பினார் மஹிந்த சமரசிங்க!
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 08:38.26 PM GMT ]
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று  நாடுதிரும்பியதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு பங்கேற்றது.
அம்மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த மாதம் 27 ஆம் திகதி உரையாற்றினார்.
இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றைக் கொண்டு வருவதை அவர் இங்கு விமர்சித்ததோடு, அதனை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவாவில் வைத்து ஏனைய நாட்டு பிரதிநிதிகளுடன் சந்தித்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பேச்சு நடத்தியதாகவும் அதற்கு எதிராக வாக்குகளை அளிக்குமாறு அவர் கோரியதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவா சென்றுள்ள இலங்கைக்குழுவினர் தொடர்ந்து அங்கு தங்கியுள்ளதோடு, இலங்கை வந்துள்ள அமைச்சர் சமரசிங்க அடுத்த வாரம் மீண்டும் ஜெனீவா செல்ல உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஒருவாரம் தங்கியிருக்கும் அமைச்சர் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு முகம்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மீண்டும் ஜெனீவா செல்லவுள்ளார் என அமைச்சு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2012 இல் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நகர்த்தும் வகையிலே இம்முறை பிரேரணை கொண்டுவரப்படுவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ள
- See more at: http://www.tamilwin.com/show-RUmryDTXNYlp4.html#sthash.LMKfmRhV.dpuf

ad

ad