புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013



வியட்நாம் புரட்சிக்கு ஹோசிமின்;ஈழப்புரட்சிக்கு கலைஞர்- ராசா பேச்சு
 

 


வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியபோது, 

தமிழக அரசியல் வரலாற்றை சுருக்கிப் பார்த்தால் பக்தவச்சலம், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கிறது. குலக்கல்வித் திட்டம் என்பது ராஜாஜியின் அடையாளம், கிராமங்கள்தோறும் பள்ளி என்பது காமராஜரின் அடையாளம், சத்துணவு என்பது எம்ஜிஆரின் அடையாளம். கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டுசென்றது, பெண்களுக்கும் சொத்தில் பங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் கலைஞர்க்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு என்ன அடையாளம் உள்ளது?
ஜெயலலிதாவுக்கு எந்த அடையாளமும் இல்லை. அரசிதழில் காவிரி தொடர்பாக அரசாணை வெளியிட்டது, தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது தனது சாதனை என்கிறார். உலகில் சிறந்த தத்துவங்களில் ஒன்று மாக்கியவல்லி, மற்றொன்று இதற்கு எதிரானது. பலமிருந்தால் எதையும் செய், தேவைகளுக்கு சட்டம் கிடையாது, முடிவுதான் முக்கியம், வழியல்ல என்பது முக்கியமானது. இதை ஜெயலலிதா பின்பற்றுகிறார்.
 பதவி, ஆட்சியில் இருக்கும்போது சிலநேரம் சரிவு ஏற்படுகிறது. பதவி மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல.  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட நான் எந்தத் தவறும் செய்யவில்லை. செல்போன் கட்டணம் ரூ. 1 என்பதை 30 காசாக குறைத்தது, சராசரி தொலைபேசிக் கட்டணம் ரூ.300 என்பதை ரூ.100 ஆக்கியது, 30 கோடி பேர் பயன்படுத்திய செல்போன்களை 90 கோடி பேருக்கு கொண்டு சென்றது ஆகிய மூன்றுதான் நான் செய்த தவறுகள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படம் தயாரிக்கப்பட்டவை என இலங்கை அதிபர் ராஜபட்சே கூறுகிறார். அவருக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு வியட்நாம் திரும்பும். 
வியட்நாம் போரின்போது 9 வயது சிறுமி குண்டு வீச்சுகளுக்கு நடுவில் நிர்வாணமாக ஓடும் படம் வெளியானது. இது ஹோசிமின் புரட்சிக்கு வித்திட்டது. அதேபோல, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படம் வெளியாகி யுள்ளது. இப்போது ஒரு ஹோசிமின் உருவாகியுள்ளார். அவர்தான் கலைஞர். போர்படை தளபதியாக ஸ்டாலின் இருக்கிறார். வியட்நாம் போலவிரைவில் தமிழீழம் வெல்லும் இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘சர்காரியா கமிஷனுக்கு பயந்து உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கை கருணாநிதி வாபஸ் வாங்கினார் என்று ஜெயலலிதா கூறினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதால் 1973ம் ஆண்டு காவிரி வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
ஆனால், சர்க்காரியா கமிஷன் வந்தது 1976ம் ஆண்டு. இதை சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணி கேள்வி எழுப்பினார். அப்போது, நானும் மனுஷிதானே என ஜெயலலிதா கூறினார்.

இப்போதுள்ள அமைச்சர்கள் சட்டமன்றத்தில் பேசுவதை காது கொடுத்து கேட்க முடியவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும். திமுகவினர் இதற்கு பாடுபட வேண்டும் என்றார்.

ad

ad