புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013

வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு! பிரிட்டன் ஆலோசனை!

வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் போது, அங்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலக சிரேஷ்ட அமைச்சர் சயீடா வர்சி இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.உலக தமிழர் பேரவையின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்
வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த தேர்தல் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் நடைபெற வேண்டும் என்று பிரித்தானியா விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடம் முழுவதும் இலங்கை சர்வதேசத்தின் உன்னிப்பான கண்காணிப்பின் கீழ் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இலங்கை சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படுவது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad