புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படியும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படும்படியும் இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்ததாகவே இப்புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
கடந்த ஆண்டு தீர்மானத்தில் நல்லிணக்கத்தையும், பொறுப்புடைமையையும் வலியுறுத்தி இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விசேடமாக இந்த அறிக்கை யுத்தத்தின் பின்னதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுவதாக பாட்ரிக் வென்ட்ரெல் தெரிவித்துள்ளார்.

ad

ad