புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: சகாதேவன்

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக தமிழ் மக்கள் தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை போரினால்
பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைய பெற்றுத்தருவதாகக் கூறி அவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்திருப்பது அவருடைய வாக்கு வங்கி அரசியலாக காணப்படுகின்றது. இவரின் உள்நுளைவைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்பட தொடங்கியுள்ளன.
இதேவேளை, வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராகச் செயற்படுவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் ஒன்றாக இருந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் மக்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காது தன்னிச்சையாக முடிவெடுத்தால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் அதற்கு எதிராக செயற்படும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் அனைவரையும் ஓரணியாகத் திரட்டி இவர்களுடைய அரசியல் வேலைத்திட்டத்தை எதிர்ப்பதோடு மக்களுக்குரிய புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்போம்’ என்றார்.

ad

ad