புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


மாமல்லபுரம் அருகே மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் கழுத்தை அறுத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் என்பவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். மாமல்லபுரம் அண்ணாநகரில் வசித்து வருபவர் சாரங்கன். இவர் மாமல்லபுரம் பேரூராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்
ரமணியை(30) கடந்த 2008ம்ஆண்டு மணிகண்டன் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவர்களுக்கு மைத்ரேயன்(4), சவுஜன்யா(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ரமணி மாமல்லபுரம் மாதாகோயில் தெருவில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மைத்ரேயன் அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பில் படித்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த சிலமாதங்களாக மணிகண்டன் வேலை எதற்கும் போகாமல் சுற்றி வந்துள்ளார் இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். மேலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் தன் மனைவியை சந்தேகத்துடன் பார்த்து சண்டை போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனால்  இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ரமணி நேற்று(மார்ச்.3) பள்ளி விடுமுறை என்பதால் மாலை சமையல் செய்து சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மணிகண்டன் தன் மனைவியை சந்தேகமாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் படுக்கையறையில் இருந்த தனது மனைவியை கழுத்தில் கத்தியால் கீறி கொலை செய்தார். மேலும் அருகில் இருந்த மைத்ரேயனையும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு குழந்தை சவுஜன்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினமும் மாலை நேரத்தில் வழக்கம் போல் தனது சகோதரியை பார்க்க வந்த கோபி வீட்டின் கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால் சன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய மணிகண்டனை பார்த்துள்ளார். மேலும் அறையெங்கும் ரத்தமாக இருந்ததையும் கொலை செய்யப்பட்டு கிடந்த  ரமணி மற்றும் இரு குழந்தைகளையும் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்து  மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் தமிழவாணன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன், ரமணி மற்றும் இரண்டு குழந்தைகள் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad