குஜராத் மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.
இதுபற்றி முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:-
4 சட்டசபைத் தொகுதி மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இன்று குஜராத் மக்கள் காங்கிரசுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர். இது காங்கிரசுக்கு மக்கள் கொடுத்துள்ள இறுதி எச்சரிக்கை.
தற்போது காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது. பா.ஜனதாவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.