ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
முக்கிய நிர்வாகிகள் 15 பேர் நாளை(5.6.2013) முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைகிறார்கள்.
மதுரையில் நாளை நடைபெறும் திமுக நிதியளிப்பு கூட்டம் பிசுபிசுத்துப்போகவே, அதிமுக மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் 15 தேமுதிகவினர் ஜெயலலிதாவை சந்திக்க புறப்பட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரையும் அதிமுகவில் இனைத்துவிட முயற்சிகள் எடுத்து வருகின்றன.