புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வேண்டும்:
ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ, தமிழழகன் பேசினார். அப்போது
அவர் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, தே.மு.தி.க.வின் மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பனை தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் தாக்கினர். இதுகுறித்து சட்டசபை உரிமைக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது. 
இந்த அறிக்கையின் அடிப்படையில் தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார், எம்.எல்.ஏக்கள் அனகை முருகேசன், பார்த்தசாரதி, அருள் செல்வன், செந்தில் குமார், நல்ல தம்பி ஆகியோரை 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்து கடந்த மார்ச் 25-ந்தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். 
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சந்திரகுமார் உள்பட 6 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ராஜேஸ்வரன் விசாரித்தார். 
பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி கடந்த ஏப்ரல் 17-ந் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிபதி ராஜேஸ்வரன் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். 
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி எம்.சக்தி நாராயணன் ஆகியோர் முன்பு வழக்கு தொடர்ந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களின் வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, நீதிபதி ராஜேஸ்வரன் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். சபாநாயகர் உத்தரவை எதிர்த்து என் கட்சிக்காரர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி வழக்கின் எண் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். அதன் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்கிறேன் எ

ad

ad