செல்லக் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதம குரு கொலை
செல்லக் கதிர்காமம் ஈஸ்வர தேவாலயத்தின் பிரதம குரு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
70 வயதான ராஜபக்ச முதியான்சேலாகே பிரேமதாச என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் காயங்களுடன் இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டதாகவும், கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.