புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராசாவை அவமதிக்கும் வகையில் கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரான திரு த. குருகுலராசா ( வயது 60)  அவர்களினைத் துவேசிக்கும் வகையில் சுவரொட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இச்சுவரொட்டிகளை் இராணுவப் புலனாய்வாளர்களாலும் ஈபிடிபி ஒட்டுக்குழுக்களாலும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கடந்த 24.04.2013 அன்று காலை10 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தென்மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான வெளியுறவு அலுவலர் லெஸ்லி ரெய்லர் அம்மையாருடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சி. சிறீதரன் அவர்களுடன் திரு த. குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
அச் சந்திப்பின் போது வட பகுதியின் தற்போதைய நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சசனைகள், வட மாகாணத் தேர்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அதன் பின்னரே தமிழ் மக்கள் உரிமைகள் தொடர்பில் கூடிய அக்கறை கொண்டுள்ள இவரது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad