புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாத சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது : த.தே.கூ.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்து இருக்கும் மாகாணங்கள் தாம் விரும்பினாலும் ஒன்றிணைய முடியாது என்ற வகையில் அரசாங்கம் 13 ஆவது
திருத்தச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சட்டமூலத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்காலத்தில் தாங்கள் விரும்பினாலும் கூட அல்லது அதற்கான பிரேரணை நிறைவேற்றினாலும் கூட ஒருபோதும் இணையமுடியாத நிலையை உருவாகும்.
மாகாண சபைகள் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவேண்டுமானால் அதற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெறப்படவேண்டும். ஆனால் தற்போது கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தின்படி பெரும்பான்மையான மாகாணங்கள் ஒப்புதல் அளித்தால் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் தற்போது வட மாகாணசபைத் தேர்தலை நடத்தினாலும் தேர்தல் முடிவடைந்தவுடன் மாகாண சபைகளின் பெரும்பான்மையை வைத்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அவ்வதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு அரசு தீர்மானித்தே அதனை மேற்கொள்கின்றது.
இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பதுடன் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதன் படி வடக்கு, கிழக்கு என்பது தமிழ் மக்களின் இணைந்த வரலாற்று பூர்வமான நிலம் என்றடிப்படையில் அது 18 வருடங்கள் இணைந்து இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad