தலைவன் என்ற படத்தில் நடித்து வருபவர் பாஸ் என்கிற டி.டி.வி.பாஸ்கரன். இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியினரின் இரண்டாவது மகன்.
பாஸ்கரனை மோசடி புகாரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் 04.06.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சாரங்கபாணி என்பவர், சென்னை சிந்தாகிரிப்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த மோசடி புகாரில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார். சாரங்கபாணியின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 லட்சம் பாஸ்கரன் லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பாஸ்கரன் மீது 11 மோசடி புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரனின் நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனராம்.
கைது செய்யப்பட்ட பாஸ்கரன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் பொய் புகாரின் பேரில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
படங்கள்: அசோக்