ஆபிரிக்காவின் தென் கமறூன் பிராந்திய அதிபர் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபிரிக்கா பிராந்தியத்தின் தென் கமறூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
அரசுகள் அற்ற தேசங்கள் (Nation without States) கூட்டமைப்பின்
சந்திப்புகளின் ஒர் அங்கமாக இச்சந்திப்பு பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.
சந்திப்புகளின் ஒர் அங்கமாக இச்சந்திப்பு பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.
தென் கமறூன் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அராசங்கத்தின் பிரதிநிதிகளான யோகி யோகலிங்கம், நிர்மலன் சீவரட்ணம் மற்றும் அரசுகள் அற்ற தேசங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.
இச்சந்திப்பில் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் ஆவணம் கையளிக்கப்பட்டிருந்ததோடு, தமிழீழ மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளினால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.