புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில் இன்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தலைவர் இரா. சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சுமந்திரன் எம்பி, கே. சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தலைவர் மனோ கணேசன், உதவி பொதுச்செயலாளர் சண். குகவரதன், ஊடக செயலாளர் பாஸ்கரா சின்னத்தம்பி, நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது 13ம் திருத்தம், வட மாகாணசபை தேர்தல் ஆகியவை தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டன.
அதேபோல் சிங்கள முற்போக்கு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

ad

ad