புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி தீ மூட்டிய இளம் குடும்பப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடந்த 18ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.

உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த செ.டனுகா (வயது 22) என்ற இளம் குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார். 
இந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
எரிகாயங்களுக்குள்ளான நிலையில் இந்தப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad