அளுத்கமவில் புகையிரதம் வான் ஒன்றுடன் மோதிய விபத்தில் ஆறு பேர் பலி
அளுத்கமை புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரில் பயணம் செய்த மூன்று பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
நேற்றும் கொழும்பின் புறநகர் அங்குலான புகையிரத நிலையத்தில் புகையிரத மிதிபலகையில் பயணம் செய்த இரண்டு பேர் புகையிரத வீதிக்கு அருகில் உள்ள வாகனம் ஒன்றில் மோதுண்டு பலியானமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரயிலுடன் வான் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அலுத்கம பாதுகாப்பற்ற ரயில் கடவையை வேன் கடந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான் வண்டிக்குள் சிக்குண்ட இரண்டு பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் சாரதி உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.