முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும், புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும், மாகாண நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை முன்வைத்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபை அமர்வுகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
கோரிக்கைகளை முன்வைத்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபை அமர்வுகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
எனினும் முதலமைச்சரை மாற்றுவதோ, ஆளுனரின் அதிகாரங்களைக் குறைப்பதோ ஒருபோதும் நடக்காது என்று கிழக்கு மாகாண ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
ஜனாதிபதியைப் பொறுத்தவரை ஒன்றில் நஜீப் ஏ மஜீத் அல்லது பிள்ளையான் ஆகிய இருவரில் ஒருவர் மாத்திரமே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.
தாம் சார்ந்த மக்களின் நலன்களை விட தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இருவரும் தாம் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள் என்பது ஜனாதிபதிக்குத் தெரியும்.
இந்தநிலையில் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தைப் பாதுகாக்கும் வகையில் அவருடன் முரண்பட்டுக் கொள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றியமைக்க ஜனாதிபதி மஹிந்த தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இந்த மாற்றத்தின் போது முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கும் முக்கிய பதவியொன்று வழங்கப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.