புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

மாகாணங்களை ஒன்றிணைக்கும் பிரேரணை தொடர்பில் தென் மாகாணசபையில் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு! ஜுலையில் நாடாளுமன்ற​த் தெரிவுக்கு​ழுவின் முதலாவது அமர்வு
இரண்டு மாகாண சபைகள் அல்லது சிலவற்றை ஒன்றிணைக்க முடியாமை மற்றும் அனைத்து மாகாண சபைகளின் இணக்கப்பாட்டுக்கு பதிலாக பெரும்பான்மையான மாகாண சபைகளின் ஒருமித்த 
தீர்மானத்துடன் செயற்படவேண்டும் என்ற இரண்டு யோசனைகள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.
தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலேயே இந்த யோசனைகள் இன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இரண்டாவது கருத்து தொடர்பில் தென் மாகாண சபையில் தீவிர நிலை ஏற்பட்டது.
பெரும்பான்மை மாகாண சபைகளின் இணக்கப்பாட்டை பெறவேண்டும் என்ற கருத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.
இருந்தபோதும், 22 மேலதிக வாக்குகளால் யோசனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக 21 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், முன்னதாக இரண்டு மாகாண சபைகளையோ அல்லது சிலவற்றை இணைப்பதற்கு 13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் இருந்த சரத்தை அகற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி
கிடைத்திருந்தது.
அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்ற​த் தெரிவுக்கு​ழுவின் முதலாவது அமர்வு ஜுலையில்- அமைச்சர் நிமல் சிறிபால
13வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத தெரிவுக் குழு அதன் முதலாவது அமர்வை வரும் ஜுலை மாதம் 09ம் திகதி நடத்தவுள்ளது.
இக்குழுவுக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தெரிவுக்குழுவுக்கு தமது கட்சி சார்பாக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியோ தாம் முன்வைத்துள்ள மூன்று நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாத்திரமே தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை நியமிக்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
மறுபுறத்தில் மக்கள் விடுதலை முன்னணி, அரசின் அமைச்சர்களுக்குள்ளேயே இது தொடர்பில் கருத்தொற்றுமை இல்லை என்றும், எனவே ஆளுங்கட்சிக்குள் இது தொடர்பில் ஒத்த கருத்தொன்றை ஏற்படுத்திக் கொண்டபின் தெரிவுக்குழுவை முன்னெடுப்பது பற்றிச் சிந்திக்கலாம் என்றும் கேலி செய்துள்ளது. 
எதிர்க்கட்சிகளின் இவ்வாறான கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியினர் தமது பிரதிநிதிகளை நியமிக்காவிட்டாலும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தனது செயற்பாட்டை முன்னெடுத்து குறித்த கால எல்லைக்குள் பரிந்துரைகளை செய்யவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற   தெரிவுக்குழு தனது இறுதி அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும். இக்குழுவின் பரிந்துரைகளை அரசியலமைப்பில் சேர்ப்பதா இல்லையாவென நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad