புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக அவர்கள் கூறுவதாக அம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநாவின் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட
அறிக்கை ஒன்றிலேயே அது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமக்கு என்ன நடந்தது என்பதை இன்னமும் நம்பமுடியாத நிலையில் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கருத்து எழுதியுள்ள இலங்கைச் செய்தித்தாள் ஒன்று, சிறிய குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காகக் கூட இலங்கைப் பொலிஸார் மிளகாய்த் தூளை பிறப்பு உறுப்பில் வீசி சித்ரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளதாக சிலர் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்கள் இப்படியான சித்ரவதைகள் குறித்த விடயங்களுக்கு முழுமையாக பழகிப் போய்விட்ட ஒருவித நிலை காணப்படுவதாகவும் ஒரு உள்ளூர் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

ad

ad