-

13 ஏப்., 2014

வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பம் 
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


ஒக்சோனியன் இருதய சிகிச்சை அமைப்பினால் இந்த பிரிவு யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட பகுதியில் உயிரிழப்பவர்களில் பலர் இருதய நோய் காரணமாகவே உயிரிழக்கின்றனர். குறிப்பாக இளைஞர் யுவதிகள் இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஓவ்வொரு வருடமும் 5 ஆயிரம் இருதய சத்திர சிகிச்சைகள் யாழ் மாவட்டத்தில் செய்யப்படுகிறது என யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வைத்திய கலாநிதிகளான கேசவன், ரவிபிள்ளை, ரவிராஜ், குருபரன் மற்றும் லக்ஸ்மன் யாழ்.பல்கலையின் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, வைத்தியர்கள், தாதியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ad

ad