புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது!: ரஜீவ விஜேசிங்க
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை  வீழ்ந்து விட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளை மேம்படுத்தாமல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் அதற்கு பதிலாக புலம்பெயர்ந்த அமைப்புக்களை இலங்கையின் வெளியுறவு அமைச்சு தடை செய்துள்ளது.
இது புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களுக்கு உந்துதலையே வழங்கும் என்று ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள உண்மைகளை ஏற்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் சிறந்த பிரசாரங்களை முன்கொண்டு செல்லவில்லை.  இதற்கு காரணம் அவர்களும் தமிழர்களே என்ற அரசாங்கத்தின் நினைப்பாகும் என்று ரஜீவ குறிப்பிட்டுள்ளார்.
இதுவே இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்ததது. எனினும் அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை.
இதற்கு மாறாக இந்த புலம்பெயர் தமிழர்களை, அரசாங்கம் சந்தேகத்துடனேயே பார்த்து வருகிறது. இது இலங்கையின் நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்தமை தவறானது.
இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் செயற்பட வழிவகுக்கின்றன. எனவே தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அது அமெரிக்காவின் பொறிக்குள் வீழ்ந்துவிட்டமையை சுட்டிநிற்பதாக ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடப்புக்களை தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர்கள் காட்ட முனைகின்றனர் என்று ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ad

ad