புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

நாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி தமிழ்நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்: நரேந்திர மோடி
 


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,

இது ஒரு பொன்னாள். பகவான் மகாவீர் ஜெயந்தி இன்று. நாளை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள். தமிழ் புத்தாண்டு. நான் லட்சுமி தேவியிடமும், சரஸ்வதி தேவியிடமும் மற்றாடி கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் வரன்களை அள்ளித் தருவீர்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். 
2014ம் ஆண்டு நடைபெறுகிற இந்த தேர்தல் தனித்தன்மை வாய்ந்தவை. நான் எனது வாழ்நாளில் எத்தனையோ தேர்தல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு தேர்தலுக்கு மக்களின் ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இந்த தேர்த-ன்தான் ஒரு விந்தை நடந்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த அரசாங்கம் வெளியேற போகிறது. புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த தேர்தல் நம்பிக்கைக்காக ஒரு தேர்தல். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. 
நாட்டு மக்கள் 10 ஆண்டுகள் பரிதவித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நாட்டில் நடைபெற்றிருக்கிற ஊழல் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. மக்களுக்கு தற்போதைய தேவை மாற்றம். நாம் இந்த தேர்தலை வெற்றியுடன் கடந்தே ஆகவேண்டும். வெறும் மாற்றத்திற்கானது மட்டுமல்ல. வரும் நூற்றாண்டு எப்படி அமையப்போகிறது என்பதற்கு அடித்தளம் அமைக்கப்போகும் தேர்தல். 
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களுடன் கூடிய அமைப்பு அமைய வேண்டும். மாநில மக்களின் எண்ணங்களின் மதிப்பு கொடுக்கும் அரசு, ஆட்சிக்கு வந்தே தீரும். நான் நான்காவது முறையாக முதல் அமைச்சராக இருக்கிறேன். ஒரு முதல் அமைச்சர் என்கிற முறையில் மாநிலங்களை எவ்வளவு கேவலமாக இந்த அரசு நடத்துகிறது என்பதை நானே நேரடியாக அனுபவித்தேன். மாநில தேவைகளை நான் நன்கு அறிவேன். பாஜக தலைமையிலான புதிய அரசு டெல்-யில் அமைந்தவுடன் மாநில அரசோடு இணைந்து செயல்படுவோம் என்று தமிழக மக்களுக்கும், மற்ற மாநில மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன். 

பாஜக, தனது கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து ஒரு ஆட்சியை அமைக்கப் போகிறது. இந்த தேர்தல் மற்றொரு வரலாறும் நடந்திருக்கிறது. 25 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்திருக்கிறது. நாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் மாற்றம் ஏற்படுத்தும். திமுக, அதிமுக கட்சிகளுக்கிடைய தமிழக மக்கள் சிக்கியிருக்கிறார்கள். இரு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றி கவலையில்லை என்பதை பல ஆண்டுகளாக பார்க்கிறோம். அதிமுகவும், திமுகவும்க தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வதிலேயே குறியாக உள்ளனர். முதல் முறையாக திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மூன்றாவது சக்தி ஒன்று உருவாகி உள்ளது. இதுவரை அவர்கள் மக்களுக்கு பதில் அளித்ததே இல்லை. தற்போது பாஜக தலைமையிலான மூன்றாவது அணி வந்துவிட்டதால் அவர்கள் பதில் அளித்தே ஆகவேண்டும். இவ்வாறு பேசினார்.

ad

ad