புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.
இணையதளத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்போட்டியில் இலங்கை அணி முதன்முறையாக டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அனைத்தும் ’ஸ்டார்ஸ் போர்ட்ஸ்’ இணையதளத்தில் ஒளிபரப்பானது.
பணம் கட்டும் வாடிக்கையாளர்கள் போட்டியை இணையதளத்தில் நேரடியாக பார்க்க முடியும். மற்றவர்களுக்கு சுமார் 5 நிமிடம் தாமதமாக போட்டி ஒளிபரப்பட்டது.
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்த இணையதளத்தில் 19.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை 14.8 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad