புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


சந்திரபாபுநாயுடு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடை பெற்றது.
சீமாந்திராவில் 25 பாராளுமன்ற தொகுதியும், 175 சட்டசபை தொகுதியும் உள்ளது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.

ஓட்டு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்– தெலுங்குதேசம் இடையே இழுபறி நிலையே நீடித்தது. பின்னர் தெலுங்குதேசம் முன்னணி பெற்றது. 12 மணி நிலவரப்படி தெலுங்குதேசம் 97 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 70 இடங்களில் மட்டுமே முன்னணி பெற்று இருந்தது.
குப்பம் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார். சீமாந்திராவில் 90 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். தெலுங்கு தேசம் 97 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது.
9 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்–மந்திரியாகிறார். ஐதராபாத்தில் கட்சி அலுவலகத் தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினார்கள். சீமாந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து இருந்தது. ஆனால் அவர் 2–வது இடத்தையே பெற முடிந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 70 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
புலிவேந்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.  விசாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட அவரது தாயார் விஜயம்மா 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
இதேபோல் ஓங்கோல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி பின்தங்கிய நிலையில் இருக்கிறார். கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன் மோகனின் சித்தப்பா மகன் அவினாஷ் ரெட்டி வெற்றி பெறுகிறார். நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரோஜா 6 ஆயிரம் ஓட்டு முன்னணியில் உள்ளார்.
கர்னூல், நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டகளில் மட்டுமே ஜெகன்மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ad

ad