புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014

கே :தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?'
ப: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது
தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.
எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன். 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ய நானே விரைந்தேன்.
உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் குசேலர் அவர்கள், அதற்கு முன்பு எனக்குப் பழக்கம் இல்லாதவர். அந்த வேளையில் என் வீட்டுக்கு வந்தார்.
'நீங்கள் சோர்ந்துவிடக் கூடாது; ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று சொல்லலாம்என உங்கள் வீட்டுக்கு வந்தேன். இங்கே, நீங்கள் இயங்குகின்ற வேகத்தைப் பார்த்துத் திகைத்துப்போனேன்’ என்றவர், கோடானுகோடி மக்களின் ஆதரவைப் பெற்று இருந்த ஒரு தலைவர், தேர்தல் களத்தில் ஒரு முறை தோற்றவுடன், மிகவும் மனம் உடைந்து சோர்ந்ததையும், அவரது பலத்தை நினைவூட்டி தான் ஆறுதல் கூறியதையும் சொல்லிவிட்டு, எனது போர்க் குணம் தன்னை வியக்கவைத்துவிட்டது என்றார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் என் தோல்விச் செய்தி வந்துகொண்டு இருந்தபோது, அதற்காக வருந்தித் தீக்குளித்த தலித் சகோதரன் அய்யனாரைக் காப்பாற்ற, வத்திராயிருப்புக்கு விரைந்து சென்று, அவரை மதுரை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்து, உடன் சிகிச்சை தந்து காப்பாற்றியபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது!''

ad

ad