புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014

எதிர்வரும் 22 ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்காக நடைபெறவிருக்கும் தேர்தலில் லண்டனில் இருந்து தேசிய விடுதலைக் கட்சியின் சார்பில் யோகி என்ற தமிழர் போட்டியிடுகின்றார்.தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த  சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகிய இவர்  நாடு கடந்த தமிழீழ பா.உ.ஆக  இருந்து வருகிறார்.பல சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் தாயக விடுதலை பணிகளில் தன்னை முழு மூச்சாக இனிது கொண்டு பாலாண்டு காலம் சேவை செய்து வரும் ஒரு  இளம் சமுதயது உறவு.இவரது சகோதர்களும் இவரின் வலி பணியாற்றிக் கொண்டிருகிறார்கள்.வாருங்கள்  எம் தமிழ் உறவுகளே.இவரது முயற்சிக்கு தோல் கொடுப்ப்போம் .உங்களால் முடிந்த அளவு இந்த செய்தியை எடுத்து சென்று உதவுங்கள்.  'எல்லோருக்கும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்!' - என்ற கோஷத்தை முன்வைத்தே அவரது கட்சி இந்தத் தேர்தல் களத்தில் இயங்கியிருக்கின்றது. யோகி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் - "ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம் எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இன அழிப்பும், நில அபகரிப்பும் அவற்றிலிருந்து பாதுகாப்பற்ற நிலையுமே. இறுதிப் போரின் பின்னரும் இதற்கு தீர்க்கமான ஒரு முடிவு இன்று மட்டும் கிடைக்கவில்லை. எமக்கு வேண்டிய நிரந்தரத் தீர்வை நோக்கி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிக்க தேசிய விடுதலைக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் எமது இருப்பை உறுதி செய்யுங்கள். ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையின் கீழ் தமிழீழ முடிவு பற்றி வெகுஜன வாக்கெடுப்பில் வாக்களித்து ஈழத் தமிழர்கள் தமது எதிர்காலத்தை உரிமையுடன் நிர்ணயிக்க நாம் பிரசாரம் செய்கிறோம்" - என்று உள்ளது.

ad

ad