புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

 விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி
அந்தஸ்தை பெற்றது என்பதால் இவரது வெற்றியை உலக தமிழர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இவருக்காக பா.ஜ.காவின் அகிலந்திய தலைவர் ராஜ்நாத் சிங், தமிழருவிமணியன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, தமிழ் ஆர்வலர்கள, வழக்குரைஞர் அணியினர், மாணவரணியினர் உள்ளிட்ட பல்வேறு அணியினர் தீவிர களப்பணியாற்றினர்.

அதனால், இவரது வெற்றியை அனைவரும் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் அதிமுக-26394 வாக்குகளும், திமுக-12779 வாக்குகளும், மதிமுக-11424 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதையடுத்து முதல் மற்றும் இரண்டாவது சுற்றும் சேர்த்து அதிமுக-47,228 வாக்குகளும், திமுக-27361 வாக்குகளும், மதிமுக-24198, காங்கிரஸ்-6340 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், இரண்டு சுற்றிலும் மதிமுக வேட்பாளர் வைகோ மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து 3-வது சுற்று வாக்குகள் எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதிலும் அதிமுகவே முன்னணி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad