புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014

படை அதிகாரிகளை போர்க்குற்றவாளிகளாக அடையாளப்படுத்த புலிகள் முயற்சி
படை அதிகாரிகளை போர்க்குற்றவாளிகளாக அடையாளப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 18ம் திகதி போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் உயர் படையதிகாரிகளின் பெயர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கும் பட்டியலி;ல் இணைக்க லணடன் வாழ் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சிய அமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிராக கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட உள்ளது.
புலி ஆதரவாளர்கள் லண்டன் நாடாளுமன்றை பயன்படுத்த அனுமதித்தமை ஜனநாயக விரோத செயலாகும் என அரசாங்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ad

ad