16 மே, 2014

களைகட்டியது அ.தி.மு.க அலுவலகம், களையிழந்தது அறிவாலயம்! (படங்கள்)நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
மேலும், ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனிலும் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.
சில தொண்டர்கள் மொட்டையடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
 
அதே நேரத்தில்  புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 35 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக படுதோல்வியை சந்தித்துள்ளது. படுதோல்வியை சந்தித்துள்ள தி.மு.க., அதன் அலுவலகமான அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.