16 மே, 2014

60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் சாதனை: வதோதராவில் மோடி பேச்சு
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றார்.

இதையடுத்து வதோதராவில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி பேசியதாவது:-

வதோதரா சகோதரர்கள் முன்புதான் முதலில் உரையாற்ற திட்டமிட்டிருந்தேன். இந்த வெற்றியை அளித்ததற்காக உங்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்க வந்துள்ளேன். 

வதோதரா தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு என்னால் 50 நிமிடங்கள்தான் ஒதுக்க முடிந்தது. ஆனால், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு வெற்றியை நீங்கள் அளித்துள்ளீர்கள். இது வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. 60 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த சகோதர-சகோதரிகளுக்கு நன்றி.

ஜனநாயக நடைமுறைகளை புரிந்துகொண்டதால் மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். ஜனநாயகத்தின் வலிமையை வதோதரா மக்கள் உலகிற்கு பறைசாற்றியுள்ளனர். தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே கூறியபடி குஜராத் மக்கள் 26 எம்.பி.க்களை அளித்துள்ளனர்.

வாரணாசியில் என்னுடைய கருத்தை தெரிவிக்க முடியாவிட்டாலும் எனக்கு நீங்கள் அளித்துள்ள பொறுப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.