புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014




சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரில் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே சுமார் 150 குடிசை வீடுகள் தீயில் கருகின 

 ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேகமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து குடிசை வீடுகளிலும் பரவத் தொடங்கியது.
இதைப் பார்த்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள், அலறியடித்தப்படி வீடுகளில் இருந்து வெளியேறி ஓடினர். அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால், அவர்களால் தங்களது வீடுகளில் உள்ள உடமைகளை எடுக்க முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த நுங்கம்பாக்கம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் கிண்டி, எழும்பூர், அம்பத்தூர்,தேனாம்பேட்டை,தியாகராயநகர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. மெட்ரோவைச் சேர்ந்த 4 தண்ணீர் லாரிகள் தீயை அணைப்பதற்கு தண்ணீரை விநியோகித்தன.
இந்த தீயணைப்பு வண்டிகள் சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை முழுமையாக அணைத்தன. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் இணைப்பு தூண்டிக்கப்பட்டது. மேலும் தீயால் அந்தப் பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தில் சுமார் 120 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியது. அந்த வீடுகளில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாகியது. இதில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில் குடிசை வீட்டில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad