புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் .ராமேசுவரம் மீனவர்கள் 42 பேர் 7 படகுகளுடன் சிறைபிடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி சிறைபிடிப்பது வாடிக்கையாகி விட்டது. மீன்கள் உற்பத்தி காலம் என்பதால்
45 நாட்கள் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த ஜூன் 1–ந்தேதி காலை மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.


அப்போது எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி ராமேசுவரத்தைச் சேர்ந்த 7 விசைப்படகு களையும், அவற்றில் இருந்த 33 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடர்ந்து மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இதுதொடர் பாக மீனவர்கள் அமைப்பு சார்பில் கோரிக்கைகள் விடுத்தபோதிலும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலையே இருந்து வருகிறது.
வழக்கம் போல் ராமேசுவரத்தில் இருந்து 715 விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை ரோந்து படையினர் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் படகுகளை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து பலர் சென்று விட்டனர்.
இந்த படகுகளில் 7 படகுகளை மட்டும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். உடனே அந்த படகுகளில் இருந்தவர்கள் கடலில் வீசப்பட்டிருந்த வலைகளை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர். அவர்களை எச்சரித்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளை தப்பிச் செல்ல விடாமல் தடுத்தனர்.
அந்த படகுகளில் இருந்து 42 மீனவர்களையும் இலங்கை ரோந்து படையினர் சிறை பிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி மீனவர்கள் அனைவரையும் அங்கிருந்து படகுகளுடன் பிடித்துச் சென்றனர்.
இந்த படகுகள் யாருக்கு சொந்தமானவை, பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் யார்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. நேற்று இரவு மீனவர்கள் அனைவரையும் தலைமன்னார் கடற்படை முகாமில் தங்க வைத்தனர்.

ad

ad