புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம் 
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை  ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26ஆவது கூட்டத்தொடர் நடை பெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த் தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது பணியகத்தின் செயற்பாடுகளின் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நவநீதம்பிள்ளை, சமர்ப்பிக்கும் கடைசி அறிக்கையாக இது இருக்கும்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான ஐ.நா. குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அறிவிப்பை அடுத்து, இலங்கை நிலை குறித்து பேரவையில் விவாதங்கள் எழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி காலை முதல் மதியம் வரை நடைபெறவுள்ள, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குழு விவாதத்திலும் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைப்பாளராகப் பங்கேற்பார்.

அந்த விவாதத்திலும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

ad

ad