புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

CHRV1
போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா 
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில்
கலந்து கொண்ட மேற்படி பிரதிநிதிகள் இந்த உறுதி மொழியை வழங்கினர்.
கனடாவின் சார்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட டீபக் ஒபராய், மற்றும் கனடிய அரசு சார்பாக இலங்கைக்கு 2013 ஆரம்பத்தில் விஜயம் செய்த அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர், றிக் டிக்ஸ்ரா உள்ளிட்ட 16க்கு மேற்பட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
கனடிய மனிதவுரிமை மையத்துடன் அனைத்துலக சர்வதேச மன்னிப்புக் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் தாங்கள் இலங்கையின் நீதி மற்றும் மனிதவுரிமை நிலமை தொடர்பாக தாங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கையை இன்னமும் சில நாட்களில் எடுப்பதாக மேற்படி பாராளுமன்றப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
CHRV2
chrv3
CHRV4
CHRV5

ad

ad