புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும் பாஸ்கராவின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்.
தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு நிகராக சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியின்  உறுப்பினர் பாஸ்கராவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கொழும்பு மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பு மாநகர சபையில் தமிழ் மொழியானது மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்துடனும் மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாகவும் நிறைவேற்றபட வேண்டும் என்றும் மொழி பெயர்ப்பானது ஒரு தனிப்பிரிவாக இயங்க வைக்கப்பட்டு அப் பிரிவின் கீழ் கொழும்பு மாநகர சபை சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய தமிழ், மற்றைய மொழிகளின் பிழைகள் உடன் திருத்தப்படுவதற்கு அமைக்கப்படும் தனிப்பிரிவிடம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை ஜனநாயக மக்கள் முன்ணணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் வீடமைப்பு நிலையியல் துறை தலைவருமான சி. பாஸ்கராவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது ஆளும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவான நீண்ட நேர உரைகளின் பின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இவ்வேளையில் பிரேரணையை தொடக்கி வைத்து உரையாற்றிய மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா,
மனிதனின் தோற்றம் முதல் அம் மனிதனுக்கான தொடர்பாடல்கள் ஏதோ ஒரு வழியில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது.
பிற்காலத்திலே இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மும்மொழி அமுலாக்கல் என்பது ஏட்டளவில் சட்டவாக்கமாக இருந்தாலும் கூட அது நடைமுறையில் நடைபெறாததாக இருக்கின்றது.
மேலும் மகிந்த சிந்தனையிலும்கூட மும்மொழி அமுலாக்கல் மிக தெளிவாக கூறப்பட்டிருந்தாலும்கூட தமிழ் மொழி அமுலாக்கல் என்பது பின்னடைவைக் கண்டுகொண்டுதான் இருக்கிறது.
உதாரணமாக இச் சபையின் மொழி பெயர்ப்பு ஒலிவாங்கி என்பது செயலற்று பலகாலம் சுட்டிக்காட்டப்பட்டும்கூட இயங்காமலிருக்கின்றது. மேலும் சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மொழி பிரச்சனையே மூலகர்த்தாவாக காணப்படுகின்றது.
இந்த மொழிப் பிரச்சனையானது உரிய முறையில் தீர்க்கப்படாதவிடத்து மொழிப் பிரச்சனைகள் ஆனது பாரிய பிற பிரச்சினைகளுக்கு வித்திடுவது தவிர்க்க முடியாததாக போய்விடும் என்று தமிழில் உரையாற்றியவுடன் மாநகரசபை உறுப்பினர் திரு. ரோய் நிசாந்த போஹகவத்த மொழி பெயர்ப்புக் கருவி வேலை செய்யாத காரணத்தினால் சிங்கள மொழியிலும் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிங்கள மொழியிலும் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இதற்கு ஆதரவாக உரையாற்றிய மாநகரசபை உறுப்பினர் திரு. ரோய் நிசாந்த போஹகவத்த அரசாங்கத்தையும் மாகாண சபையையும் விமர்சித்து அவர்களின் அசமத்தனமான போக்குகளை விலாவாரியாக விமர்சித்து பேசியதுடன், பிரேரணைக்க ஆதரவாக பேசினார்.
மாநகர சபை உறுப்பினர் சுனில் விதானகே அவர்கள் யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் இந்த தமிழ் மொழி அமுலாக்கல் என்பது காலத்தின் தேவை என்றும் மீண்டும் வரலாற்று பிழைகள் ஏற்படாமல் இது உடனடியாக மத்திய அரசியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
மாநகர சபை உறுப்பினர் மொஹமட் ரம்ஸி அவர்கள் முன்னாள் பிரபல கொமினிஸ்வாதியான் கொல்வின் ஆர்.டி.சில்வாவின் கருத்தான “இரு மொழிகள் ஒரு நாடு ஒரு மொழி இருநாடு” என்று கூறியதை நினைவுபடுத்தி பிரேரணைக்கு ஆதரவாக மொழி அமுலாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் குருசாமி அவர்கள் இது காலத்திற்கு ஏற்ற பிரேரணை என்றும், இது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதையே மாநகர சபை உறுப்பினர் கங்கைவேணியன் அவர்களும் விலியுறுத்திப் பேசினார்.
தொடர்ந்து உரையாற்றி மாநகரசபை உறுப்பினர் திருமதி. பீ.வீ.ஜீ பெரேரா அவர்கள் தமிழ் மொழி அமுலாக்கல் பிரேரணை வேளையில் 57வது ஒழுங்கையானது தமிழ் சங்க ஒழுங்கை என பெயர்மாற்ற இச் சபை அங்கீகரிக்கப்பட்ட பின் இது நிறுத்தப்பட்டு இப்போது சங்க ஒழுங்கை என பெயர் மாற்றப்பட்டதற்கான வருத்தத்தை சபையில் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
மொழி அமுலாக்கல் பிரேரணைக்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் தேசபந்து சனவிருப்பம் எச் சன்ஜீவ சந்தரதாச பாஸ்கரா எனது நண்பர் என்றும் தனது மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஒருவர் இன்றும் ஒரு இனவாதி அல்ல என்றும் உதாரணமாக ஒரு மருதானை பன்சலை நிகழ்வில் பூஜை நிறைவடையும் வரையும் இருந்ததை நினைவுகூர்ந்து மொழி அமுலாக்கலின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஒரு மொழி நடைமுறையில் இருக்கும் நாடுகளை உதாரணம் காட்டி இது முன்பே அப்படி இருந்திருப்பின் இப் பிரச்சினை இவ்வளவு விஸவரூபம் எடுத்திருக்காது என்று கூறினைார்.
அத்துடன், இது சம்பந்தமாக மேலும் பல மாநகரசபை உறுப்பினர்கள் உரையாற்றிய பின்னர்,  இப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ad

ad