புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


எதிர்வரும் வெள்ளியன்று கோலாகலமாக  உலகக்கிண்ண போட்டிகள்
இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து நடைபெறும் பிரேசில் பிரிட்டனை விட 34 மடங்கு பெரியது. அதனால், விரிவான திட்டமிடலுக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்குப் பயணிக்க வேண்டும். இத்தொடரின் முதல் ஆட்டம் சா பாலோவில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் ரியோ டி ஜெனிரோவில் முடிகிறது. ஆரம்பம் முதல்
இறுதிவரை நடைபெறும் ஆட்டத்தைக் காண வேண்டுமென்றால் ஒருவர் சுமார் 11,800 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும். லண்டனிலிருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு 9,254 கிலோ மீற்றர் தூரம்தான். அதைவிட அதிகம் தூரம்பயணிக்க வேண்டும் எனும் போது, உலகக் கோப்பைக்கான பயணம் எத்தனை தொலைவு என்பது வியக்க வைக்கிறது. இந்தியாவிலிருந்து பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் உலகக் கோப்பையைக் காண செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்ல, விமான போக்குவரத்தே சிறந்த கருவியாக இருக்கும். இதை உணர்ந்த பிரேசில் அரசு, “ஏர் பாஸ்” வழங்குகிறது. இந்தப் பாஸை பயணி வாங்கி விட்டால் போதும், அதில் உள்ள 9 கூப்பன்களைப் பயன்படுத்தி, வேறு வேறு உள்ளூர் விமானங்கள் ஒன்பதில் பயணிக்க முடியும்.
இதுதவிர, தென் அமெரிக்காவை ஒருவர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்றாலும் கூட, அதற்கு “தென அமெரிக்கன் ஏர் பாஸ்” வழி வருக்கிறது. இந்த பாஸ் வாங்கினால், பிரேசில், ஆர்ஜெண்டினா, பொலிவியா, சிலி, பாராகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கும் செல்ல முடியும்.
நகர வீதிகளை ரசிப்பதற்கு உகந்த பயணம் டேக்ஸி. ஐரோப்பாவை ஒப்பிடும் போது பிரேசிலில் டேக்ஸி கட்டணம் குறைவுதான். வாடகைக் கார் என்றால், உலகக் கோப்பை போட்டி நாள்களில் நிறுத்துவதற்கு பெரும் சிரம்மப்பட வேண்டுமாம்.
அதேசமயம், பிரேசிலில் பிக் பாக்கெட் இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு மதுவுக்கு தடை.
உலகக் கோப்பை கொண்டாட்டத்தால் சிறுவணிகர்கள் முதல் பெரும் முதலாளிகள் வரை உற்காகத்துடன் காணப்பட்டாலும், மதுபானக் கடைக்காரர்கள், மது அருந்தாமலே தள்ளாடும் நிலையில் உள்ளனராம். காரணம், பிரேசில் அரசு விதித்துள்ள தடை.
கால்பந்து ஆட்டத்தில் தங்கள் அணி தோல்வியைச் சந்தித்தால், அதிருப்தியில் ரசிகர்கள் வெறியர்களாகவும் மாறுவர். அதைக் கருதியே ஃபிஃபா கடும் விதிகளை அமுல்படுத்தியுள்ளது. அதன்படி, போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றி 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மதுபானங்கள் விற்கக்கூடாது. அதனால், எப்படி கல்லாவை நிரப்புவது என மதுபான கடை உரிமையாளர்கள் இப்போது திண்டாடி வருகின்றனர்.
கேக்ஸிரோலா
உலகக் கோப்பையின் போது வீரர்களை உற்சாகப்படுத்த “கேக்ஸிரோலா” எனும் உபகரணத்தை அதிகாரப் பூர்வமான இசைக்கருவியாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
அளவான சத்தத்தை எழுப்பும் கேக்ஸிரோலாவினுள் விதைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதை அசைக்கும்போது, சல சலவென கடல் அலைகளைப் போல சத்தம் உண்டாகும் என்று அதனை உருவாக்கிய கார்லின்ஹோஸ் ப்ரென் பதிலளிக்கிறார்.
1978, 1986 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன். 1990 இல் 2ம் இடம் அதன் பிறகு ஆஜெண்டினா அணி காலிறுதிச்சுற்றைக் கூட தாண்ட முடியவில்லை. ஆனால், மெஸ்ஸி தலைமையிலான தற்போதைய அணி, வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சொந்த மண்ணில் கடும் பயிற்சி மேற்கொண்ட ஆர்ஜெண்டினா அணி, வரும் 9-ம் தேதி பிரேசிலுக்குப் புறப்படுகிறது. அணியினரைக் கெளரவிக்கும் வகையில், அந்நாட்டு அரசு வீரர்களுக்கென சிறப்பு விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விமானத்தின் வெளிப்புறத்தில் அணியின் சீருடை நிறத்தில் வர்ணமும், வீரர்களின் உருவப் படங்களும் வரையப்பட்டுள்ளன.
கடைசி வாய்ப்பு...
உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்ட நிலையில், தற்போது கடைசிக் கட்டமாக சுமார், 180,000 டிக்கெட்டுகளை புதன்கிழமை முதல் விற்பனை செய்ய ஃபிஃபா முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கடைசி நேர டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கும் இணையம் மூலமாகவோ அல்லது டிக்கெட் கவுன்ட்டரிலோ இந்த டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும். தொடரில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களுக்கும் டிக்கெட்டுகள் உள்ளன என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.

ad

ad