புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

இலங்கை தமிழர் பிரச்சினையை ஜெயலலிதா ஆயுதமாக பயன்படுத்துகிறார் 
தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததாகவும் தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா பிரேரணை முன்வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ளார். இது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மாநில அரசுகளின் ஆதரவு தேவைப்படாத தனிப்பலம் கொண்ட அரசாங்கம் ஒன்றை நரேந்திர மோடி அமைத்துள்ளார். இதனால் இலங்கை அரசியல் நிலையும் ஸ்திரம் அடைந்துள்ளது. ஜெயலலிதா ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் மத்திய அரசை அது எவ்விதத்திலும் பாதிக்காது. இது இலங்கைக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

ad

ad