புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


Tefat
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்
கட்சியித் தலைவர் கத்தலின் வின் -முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் ரிம் ஹூடாக்- புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹொர்வத் ஆகியோருக்கு இடையேயான நேரடி தொலைக்காட்சி விவாதம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றது.
இந்த விவாதத்தின் போது லிபரல் கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும்- முற்போக்கு பழமைவாதக் கட்சியின் பொதுத் துறைப் பணியாளர்கள் ஒரு இலட்சம் பேரை பணி நீக்கும் விவகாரமும் முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன.
விவாதத்தின் முதல் கேள்வியாகவே எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம் தொடர்பிலான விவாகரம் முன்வைக்கப்பட்ட நிலையில்- ஆரம்பம் முதலே அதனைத் தற்காத்து பேசிய முதல்வர் கத்தலின் வின்- அந்த திட்டம் நிறுத்தப்பட்டமைக்காக பலமுறை மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
இரண்டு எரிவாயுத் தொழிற்சாலைகளையும் இடம்மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவு தவறானது என்பதையும்- இதனால் பொதுமக்களின் பெருமளவான பணம் வீணடிக்கப்பட்டது என்பதையும் ஒத்துக்கொண்ட முதல்வர்- ஒருசார் நலன்களுக்காக பொதுமக்களின் நலன்கள் பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களின் நலன்களுக்கு மாறான- அரசு மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதமான இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாது எனவும் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை ஒரு இலட்சம் அரசாங்க பணியாளர்களை பணிநீக்கம் செய்வதான தனது திட்டத்தினை தற்காத்துப் பேசிய முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் ரிம் ஹூடாக்- அதன் மூலம் தன்னால் ஒரு மில்லியன் புதிய வேலை வாய்ப்புக்களை எட்டு வருடத்தில் ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தில் ரிம் ஹூடாக் அடிப்படை கணிப்பீட்டு தவறுகளை மேற்கொண்டுள்ளதாக கத்தலின் வின்னும்- ஆன்ரியா ஹொர்வத்தும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும் இந்த திட்டத்தில் தான் மிகவும் திடமான நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ரிம் ஹூடாக், மில்லியன் வேலைவாய்ப்புத் திட்டத்தினை தன்னால் நிறைவேற்ற முடியாது போனால்- தான் பதவியை விட்டு உடனடியாக விலகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad