புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


ஈகைப்பேரொளி செந்தில் குமரனின் முதலாம் ஆண்டு நினைவில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் அறிக்கை!

தமிழீழ மக்களின் துயர்கண்டு தாங்காது அவர்களின் சுதந்திரவாழ்விற்காகவும், தாயக விடுதலைக்காகவும் தீயினிற் கருவாகிய அனைத்து ஈகிகளின் நினைவாகவும் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (05.09.2014) சுவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் வெளியிடப்படும் ஊடக அறிக்கை

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!

தனக்கானதாய், தொன்றுதொட்டுத் தான் வாழ்ந்த அந்த மண்ணிலிருந்து  கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அனைத்துலகின் எந்தவொரு போர் விதிமுறையையும் மீறாது தமிழீழ விடுதலைக்காகப்  போராடி வந்த ஈழத்தமிழினத்தின் போராட்ட வலுவைச் சிதைத்துப் பலமிழக்கச் செய்து எமது மக்களைக் கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தது சிங்கள தேசம்.  சிங்களத்தின் இந்தத்  திட்டமிட்ட இன அழிப்புப் போருக்கு அனைத்துலகின் வல்லாண்மை மிக்க நாடுகள் யாவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் துணை நின்றன. இருந்தும் கூட புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்களும், தமிழ்நாட்டிலே வாழ்கின்ற எமது உறவுகளும் தாயகத்திலே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த எமது இனத்தைக் காக்கக் கோரி அனைத்துலக நாடுகள் எங்கும் அமைதிப் போராட்டங்களையும், கண்டனப் பேரணிகளையும் நடாத்தினோம்.

ஆனால், அனைத்துலகமோ எமது அவலக் குரலைக் கேட்டும் எங்கள் இனத்தின் மீதான இன அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்தாது அமைதியாய் இருந்தது. அனைத்துலகின் இத்தகைய பாராமுகத்தால்  1995இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடப்பெயர்ந்த  இலட்சக்கணக்கான மக்களைக் காக்கக் கோரி தமிழ்நாட்டின் திருச்சியில் தன்னைத்தானே தீமூட்டி ஈகம் புரிந்த அப்துல் ரëப் அவர்களின் வழியில் 2009 ஜனவரி 29இல் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் முத்துக்குமாரன் தீயினிற் கருகி உயிர்க்கொடை தந்தான். அப்போதும் அனைத்துலக அரங்கின் போக்கில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. தமிழின அழிப்பு தொடர்ததால் முத்துக்குமார் வழியில்  தமிழ்நாடு, மலேசியா என்று நீண்ட உயிர்க்கொடை, ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசனின் ஈகத்தைக் காலடியில் கண்ணெதிரே கண்டும் அனைத்துலகத்தின் ஆட்சிமையங்கள்  பேச மறுத்தன. இதனால் ஈகங்களின் எண்ணிக்கை இருபத்துமூன்றாக உயர்ந்தது. முள்ளிவாய்க்கால் முற்றுகையோடு சத்தமின்றி தமிழ் இன அழிப்பைச் சிங்களம் இன்றுவரை அரங்கேற்றுகிறது.

தமிழ்நாட்டிலும்,  புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்ழின அழிப்பிற்கு நீதி கேட்டுப் போராட்டங்கள் தொடர்கின்ற வேளையிலே, மூவர் விடுதலைக்காகத் தமிழ்நாட்டின் காஞ்சியில் 28.08.2011 தோழர் செங்கொடியும், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா முன்றலில் முருகதாசன் திடலில் 05.09.2013 அன்று ஈகைப்பேரொளி செந்தில்குமரனும் தீயினிற் கருவாகி உயிர்க்கொடை தந்தனர்.       
                     
அப்துல் ரëப் முதல் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் வரை இருபத்தைந்து பேரினதும் ஒருமித்த கோரிக்கையும், எமது மண்ணின் சொத்துக்களான மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட மக்களினதும் கனவும் தமிழீழ விடுதலை ஒன்றே ஆகும். இன்று,  விடுதலையை வென்றெடுத்து அவர்களின் கனவை நனவாக்கவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களாகிய எம்மிடமே உள்ளது. இன்றைய காலத்தின் தேவையாகக் கனிந்துள்ள தமிழின அழிப்பை உறுதிப்படுத்தும் சாட்சியங்களை வழங்குவதும், எடுத்துக்கொடுப்பதும் தமிழர்கள் ஒவ்வொருவரினதும் கடமை என உணர்ந்து தமிழின அழிப்பை உறுதிப்படுத்தும் விசாரணைகளுக்கு வலுச்சேர்த்து, அவர்களின் உயிர்த்தியாகத்திற்கு உரமூட்டுவோம்.

எனவே, எம் அன்பிற்குரிய மக்களே! தமிழீழ விடுதலைக்காய் உயிர்க்கொடை தந்த அத்தனை ஈகிகளின் ஈகத்திற்கும் மதிப்பளித்து அவர்களின் நினைவாக ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 07.09.2014 ஞாயிறு பிற்பகல் 15:00 மணிக்கு சியோன் நகரில் (Rue de St Guerin 2, 1950 Sion.) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு ஈகைப்பேரொளிகளுக்கு வணக்கம் செலுத்தி உறுதி எடுக்க அன்போடு அழைக்கின்றோம்.

அத்தோடு, 'அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்" என்ற இறுதி முழக்கத்தோடு தீயில் கருவாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் வேண்டுகோளைச் சிரம் ஏற்று எதிர்வரும் 15.09.2014 அன்று சுவிஸ் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெறவுள்ள ஒன்றுகூடலிற்கு அனைவரையும் அணிதிரண்டு வருமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                                                              நன்றி
                                               தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழு

ad

ad