புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014

ரிசிக்கு வாக்கு ; ஊவா தேர்தல் மோசடி அம்பலம் 
வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன அப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஹல்தமுல்லை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அரிசி, பருப்பு, சீனி, நூடில்ஸ் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கையானது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் காணப்படுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன மக்களால் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பளிக்கப்பட்டது பின்னர் குறித்த உழவு இயந்திரம்  அப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விடுவிக்கப்பட்டுள்ளது.

ad

ad