புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. 
இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம், பொருளாளராக அன்ரனி
ஜெகநாதன், இரட்ணசபாபதி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன். செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வன்னியைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான எஸ்.பரஞ்சோதி, ஏ.எம்.இமாம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
கட்சியின் துணைச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்னர். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர்களாக அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார் ஆகியோர் தெரிவாகினர்.
நிர்வாகச் செயலாளராக சி.குலநாயகம் தெரிவு செய்யப்பட்டார். சட்டத்துறை செயலாளராக சி.தவராசா நியமிக்கப்பட்டார். அரசியல் செயற்குழுத் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவானார். இளைஞர் அணி செயலாளராக சி.சிவகரன் தெரிவுசெய்யப்பட்டார். கொள்கைப் பரப்புச் செயலாளராக கிளிநொச்சியைச் சேர்ந்த எஸ்.வேளமாலிகிதன் தெரிவுசெய்யப்பட்டார்.

ad

ad