புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014

அமெரிக்காவை கலக்கினார் நெய்மர் 
news
அமெரிக்காவில் நடைபெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின. 


காயம் காரணமாக பிரேசில் அணித் தலைவர்  தியாகோ சில்வா போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக நெய்மர் தலைமையில் பிரேசில் அணி களமிறங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பிரி கிக் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அணித் தலைவர் நெய்மர் கோலாக மாற்றி அணியை வெற்றி பெறச் செய்தார். வரும் 9-ம் திகதி நடைபெறும் மற்றொரு நட்புரீதியிலான போட்டியில் பிரேசில் அணி ஈகுவேடார் அணியை எதிர்கொள்கிறது

ad

ad