புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014


சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு 
கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
 
சுன்னாகத்தில் அமைந்துள்ள மின்சார சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் கிணறுகள் பாதிக்கப்பட்டமை சம்பந்தமாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த வழக்கு விசாரணையில் தெல்லிப்பழை சுன்னாகம் பிரதேச சுகாதார வைத்தியதிகாரிகள் சுன்னாகம் பிரதேச சபையின் செயலாளர், வட மாகாண சுற்றுச் சூழல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர், நோத்பவர், உத்துறு ஜெனனி  ஆகிய  மின் உற்பத்தி நிறுவனங்களின் பொறியியலாளாகள் நீதிமன்றத்தில் சமூகமளித்து இருந்தார்கள்.
 
சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் வாதப் பிரதி வாதங்கள் இடம் பெற்ற நிலையில் அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு வழங்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன் உரிய அறிக்கைகளை குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு வார காலத்தில் சுற்றுச் சூழல் அபிவிருத்தி அதிகார சபையினால் அறிவுறுத்தப்பட்ட செயல் திட்டங்களின் அடிப்படையில் உடனடியாக நிலத்தின் கீழ் தொட்டி கட்டி அகற்றப்படும் கழிவு ஒயில் செயல் திட்டத்தை நிறுத்தின் மேல் தொட்டி கட்டி அதன்மேல் இரும்பு தாங்கி வைத்து அதனுள் கழிவு ஒயில் சேகரிக்கப்பட்டு அதன்பின்னர் அகற்றப்படும். இந்தப் பணியை ஒரு வார காலத்தில் நிறைவு செய்வதாக நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
 
சுன்னாகத்தில் அமைந்துள்ள நோத் பவர் நிறுவனத்திறக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையைத் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுற்றுச் சூழல் அதிகார சபையினால் விதந்துரைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றும் படியும் அதனை சுற்றுச் சூழல் அதிகார சபையும், சுகாதார வைத்தியதிகாரியும் கண்கானித்து நீதிமன்றத்திற்க்கு வாராந்தம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணிக்ப்பட்டுள்ளது.

ad

ad