புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

சாமியார் ராம்பால் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அவர் ஆஜராகாமல் போனதால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதனையடுத்து சாமியார் ராம்பலைக் கைது ஹரியானா மாநில காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக  ஹரியானா காவல்துறையினர்  ஹிசாரில் உள்ள சாமியாரின் ஆஸ்ரமத்திற்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த சாமியாரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது அடியாள் படை, போலீஸார் மீது கல்வீசி தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீஸாருக்கும், ராம்பாலின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. உடனே காவல்துறையினர்  கண்ணீர் புகைக்  குண்டுகளை வீசி கூட்டத்தைக்  கலைத்தனர்.அப்போது  சாமியார் ஆதரவாளர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர்  புகார் தெரிவித்தனர்
இந்நிலையில் சாமியார் ராம்பாலை சுற்றி அவரது ஆதரவாளர்கள், மனித வளையம் அமைத்து அவரை போலீஸார் நெருங்க விடாமல் நிற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு செல்லும் குடிநீர், உணவு சப்ளை, மின் விநியோகம் உள்ளிட்டவற்றை துண்டித்துள்ள காவல்துறையினர், சாமியாரின் ஆதரவாளர்கள் மற்றும் சீடர்களை அங்கிருந்து வெளியேறுமாறு துண்டு பிரசுரங்களை வீசி வருகின்றனர்.
இந்நிலையில் எந்த நேரத்திலும் சாமியார் ராம்பால் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

ad

ad