ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்! பிரபல நடிகர் பேட்டி!
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், காகிநாடா தும்மலபேட்டாவில் நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காமினேநி ஸ்ரீநிவாசுலு, முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணம் ராஜு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணம் ராஜு, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இத்தனை நாள் அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது கேள்விக் குறியாக இருந்தது.