புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014


யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.


இதற்கான அடிக்கல்லை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நேற்று முன்தினம் நாட்டி வைத்தார்.
 
யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளான பல பெண்கள், யாழ். மாவட்டத்தில் அதிகளவு காணப்படுகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வளமான வாழ்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் இந்த இல்லம் அமைக்கப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
 
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் நிதி உதவியுடன் 17 மில்லியன் ரூபாய் செலவில் இந்த இல்லம் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் இதற்கான கட்டுமான பணிகள் பூர்த்தி அடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad