நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து
பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சிக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தங்கள் தலைமையின் கீழ் அமையும் அரசு பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். மத்திய அரசு - தமிழக அரசு உறவு இணக்காமான சூழல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். மோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.