புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

உலக அளவில் மாபெரும் சக்திகளாக திகழும் மோடி, ஜெயலலிதா: நடிகர் விஜய் வாழ்த்து
இந்திய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தேர்தலில் சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை
தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய அளவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

ad

ad